பள்ளி அருகே குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2023-01-11 16:48 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் குப்பைகளுடன் எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போருக்கும், மாணவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உடல் நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவமணி, கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்