திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாழைப்பந்தல் ரோட்டில் பாறைகுளம் உள்ளது. பையூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்தக் குளத்தில் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால், குளத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குளத்தைச் சுகாதாரமாகப் பேணிகாக்க வேண்டும், குப்பைக்கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ரமேஷ், ஆரணி.