குப்பை கொட்டும் இடமாக மாறிய கால்வாய்

Update: 2022-08-17 10:53 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறந்து விடப்படும் தண்ணீரின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கால்வாய் சீரமைக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பெரியகல்லப்பாடி பகுதிகளில் வரும் கால்வாய்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். குறித்த நேரத்துக்கு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது இல்லை. மேலும் குப்பைகளால் தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் வருகிறது. மேலும் குப்பைகள் அதிக அளவில் கால்வாய்களில் தேங்கி கிடப்பதால் கால்வாய் முழுவதும் தூர்ந்து வருகிறது.எனவே கால்வாய்களில் குப்பைக் கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்வாயை பராமரிக்க ேவண்டும்.

சிவா, பெரியகல்லப்பாடி. 

மேலும் செய்திகள்