பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி பேராயூர் பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது . அதேபோல் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் போக்குவரத்து பாதியில் தேங்கி நிற்கிறது. எனவே பள்ளி அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் .