ஈரோடு ராஜாஜிபுரம் சத்தி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அருகில் பல்வேறு குடியிருப்புகளும், சமுதாயக்கூடமும், மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடமும் உள்ளது. குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றிவிட்டு, அங்கு பொதுமக்கள் குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.