சென்னை அடுத்த காட்டான்குளம் செல்லியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ரேசன் கடை அருகில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்படாததால் குப்பைகளும், கழிவுகளும் சாலையில் கொட்டபடுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இந்த இடத்தில் குப்பை தொட்டி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.