பயன்படுத்தாத குப்பை தொட்டிகள்

Update: 2022-08-20 16:17 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காமராஜாபேட்டையில் பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழே கொட்டி வந்தனர். சுகாதார சீர்கேட்டை தடுக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குப்பைதொட்டிகள் வாங்கப்பட்டன. அதை தெருக்களில் வைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு வைத்துள்ளனர். இதனால் குப்பை தொட்டிகள் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும்.

-சந்திரன், ஏரியூர், தர்மபுரி. 

மேலும் செய்திகள்