நோய் தொற்று அபாயம்

Update: 2022-07-06 15:35 GMT
சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் சாலையில் உள்ள தனியார் பள்ளி நுழைவுவாயில் அருகே உபயோகப்படுத்தப்பட்ட முகமூடிகள், நேப்கின் போன்ற கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் இந்த குப்பைகளை கடந்து தான் பள்ளி செல்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று மீண்டும் தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில், இது போன்ற குப்பைகளால் குழந்தைகளுக்கு நொய்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே விரைவில் இதற்கொரு தீர்வு வழங்க சமப்ந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்