குப்பைகளால் விபத்து அபாயம்

Update: 2022-08-19 11:00 GMT

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையோரம் செங்குளம் செல்லும் வாய்க்கால் கரையில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். தற்போது காற்று காலம் என்பதால் அவை காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் முகத்திலும் விழுகிறது. இதனால் விபத்து  ஏற்படும் அபாயம்  உள்ளது.  எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்