பெருமாநல்லூரை அடுத்த தட்டான்குட்டையில் இருந்து அத்திகாடு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பை கொட்டப்பட்டு குப்பை நிரம்பி விட்டது. ஆனால் குப்பை அள்ளப்படாததால் குப்பை கீழே கொட்டப்படுகிறது. இதனால் காற்றுவீசும்போது குப்பை சாலை முழுவதும் சிதறிக்கிடக்கிறது. இப்படி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.