சேலம் 35-வது வார்டு அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் குப்பை தொட்டிகள் உள்ளன. குப்பை தொட்டி இருந்தும் அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள குப்பைகளை அள்ளி குப்பை தொட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவாசகன், அம்மாபேட்டை, சேலம்.