சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பாலகிருஷ்ணன் தெருவில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக கிடப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றியுள்ளனர். இதனால் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் துரித நடவடிக்கை மேற்கொணட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்தனர்.