சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை எதிரே இருக்கும் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் டிரான்ஸ்பார்மர் அருகே பாதசாரிகள் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் இந்த இடத்தை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றி இந்த இடத்தை சுத்தமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.