நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே களங்காணி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் உள்ளது. அதன் அருகே குப்பை தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்தநிலையில் தினமும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. அதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்க வேண்டி உள்ளது. எனவே குப்பை தொட்டியில் குவியும் குப்பைகளை தினமும் அள்ள ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.