மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் ஊராட்சியில் உள்ள பெரிய தெரு ,சின்னத்தெரு செல்லும் சாலையில் இருபுறமும் முட்செடிகள், வளர்ந்து உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை , இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சீர்காழி