தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-15 15:51 GMT

தர்மபுரி காந்தி நகரில் உள்ள பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் கருவூல அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் இந்த குப்பைகளால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ரவிக்குமார், காந்திநகர், தர்மபுரி.

மேலும் செய்திகள்