கூத்தாநல்லூர் தாலுக்கா, குனுக்கடி கிராமத்தில் குப்பை கிடங்கு உள்ளது. நகர் முழுவதிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பை இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிகளவில் தேங்கி இருக்கும் போது அடிக்கடி தீ பற்றி எரிகிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தீ அதிகளவில் பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே,அடிக்கடி தீ பற்றி எரியாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், கூத்தாநல்லூர்.