தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா இருமத்தூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் கோழிக்கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், இருமத்தூா், தர்மபுரி.