சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட் முன்பு கொட்டப்படும் குப்பைகள் தினமும் அள்ளப்படுவதில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லெனின், தாரமங்கலம், சேலம்.