சேலம் மாவட்டம் சங்ககிரி ஐவேலி ஊராட்சிக்குட்பட்ட அக்கமாபேட்டை, கெமிக்கல்ஸ் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் மலைபோல் கொட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதையும், குப்பைகள் எரிக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், சேலம்.