சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு செல்லும் வழியில் குப்பைகள் குவிந்து குப்பைமேடாக காட்சி தருகிறது. கட்டிட கழிவுகள், மாமிச கழிவுகள், பாதாள சாக்கடை கழிவுகள் போன்றவைகளின் ஆக்கிரமிப்பால் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு தான் பயணம் செய்கிறார்கள். மேலும் மழை காலங்களில் இந்த பகுதி மிகவும் மோசமாக காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவிகள் பெரும் அவதிக்கு இடையே இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?