நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-06-18 12:08 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 18-ம் எண் நுழைவுவாயில் அருகே காய்கறி மற்றும் பழ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய பகுதியான இந்த பகுதி, தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளால் குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருப்போர்கள் மற்றும் இந்த வழியை கடந்து செல்பவர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கொசுத்தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்