திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதும், இரவு நேரத்தில் அந்த கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் தினமும் அரங்கேறுகிறது. இதனால் இந்த பகுதியில் காற்று மாசுபடுவதுடன், குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?