தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சி நெருப்பூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட புதிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட குப்பைதொட்டிகள் முறையாக பயன்படுத்தாமல் குப்பை மேட்டில் கிடக்கின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தென்னரசு, ஏரியூர், தர்மபுரி.