சென்னை சைதாபேட்டை முதல் தெருவில் உள்ள துரைசாமி தோட்டம் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டிட கழிவுகளும் அதிகமாக தேக்கி வைக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டில் இல்லாத பழைய வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?