பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகள்

Update: 2022-08-09 17:07 GMT

நாமக்கல் மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் வேகமாக காற்று அடிக்கும் நேரத்தில் அந்த குப்பைகள் பஸ் நிலைய வளாகத்திற்குள் பரவி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

-கருணா, செம்மேடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்