தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி ஊராட்சியில் அவுசிங் போர்டு குடியிருப்பு உள்ளது. அங்கு சேரும் குப்பைகளை கடந்த சில நாட்களாக ரெயில்வே கேட் அருகே ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், தர்மபுரி.