பெங்களூரு ஜெயநகர் 9-வது மெயின் ரோடு பகுதியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் அருகே நடைபாதையில் மரம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த மரத்தில் அருகில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த நடைபாதை அசுத்தமாக இருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிஅடைகின்றனர். எனவே நடைபாதையை சுத்தமாக வைத்து, பாதசாரிகள் சிரமம் இன்றி நடந்து செல்ல அதிகாரிகள் வழிவகை செய்வார்களா?