கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியான கோவைப்புதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இரும்பு குப்பை தொட்டிகள் ஓட்டை, உடைசலாக காட்சியளிக்கிறது. இதனால் தெருநாய்கள் குப்பை தொட்டியில் இருந்து குப்பைகளை வெளியே இழுத்து போட்டு சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே புதிய குப்பை தொட்டிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.