நாகை மாவட்டம் தெற்குப்பொய்கை நல்லூர் ஊராட்சி பரவையிருந்து வடவூர் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் புகை பட்டு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் எரிப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
======