சென்னை புரசைவாக்கம் திருமலையப்பன் தெருவில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றுவதற்கும், இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.