மயிலாடுதுறை நகரில் பாசிக்கடைதெருவில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக குப்பைத்தொட்டி எதுவும் இது வரை வைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தெருவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக தெருவிர் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசிக்கடை தெருவில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.