ஈரோடு சங்கு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் கீதா நகரில் இருந்து குமலன் குட்டை செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அந்த குப்பையில் மதுபிரியர்கள் மதுபாட்டில்களையும் வீசி சென்று உள்ளனர். அதுமட்டுமின்றி குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ- மாணவிகள் நடமாட முடியவில்லை எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.