கரூரை அடுத்த ஈரோடு-கோவை பிரியும் சாலையில், முனியப்பன் கோவிலுக்கு அருகே குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். மேலும் குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.