தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்ட பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்ததால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அதிராம்பட்டினம்.