சென்னை ஏழு கிணறு, பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவர்அருகே குப்பைகள் குவிந்துள்ளது. இந்த குப்பைகள் அகற்றப்படாததால், இந்த இடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதோடு அசுத்தமாகவும் காட்சி தருகிறது. எனவே தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.