தஞ்சை விளார் சாலை பர்மா காலனி அடுத்துள்ள நாவலர் நகர் போன்ற இடங்களில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பன்றிகள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் குடியிருப்புகள் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.