சுற்றுச்சூழல் மாசு

Update: 2022-08-02 12:21 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனி தனியாக பிரித்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக்கை நகராட்சி பணியாளர்கள் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பின்புறம், பொற்குடையார் கோவில் சாலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீட்டிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் கூட பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் நாள் முழுவதும் அந்த பகுதியில் புகை வந்து கொண்டே உள்ளது. பிளாஸ்டிக்கை எரிப்பதால் பிளாஸ்டிகில் இருந்து வெளிவரும் நச்சு தன்மையை பொதுமக்கள் சுவாசிக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்