குப்பையால் துர்நாற்றம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு யாசின் பாபு நகர் மெயின் ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிறைந்து வெளியில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அடிக்கடி நாய்கள் செத்துக்கிடப்பதால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது ரோட்டுக்கு செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், செத்து தூக்கி வீசப்படும் நாய்களின் உடல்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சையத் சலாவுத்தீன், திருப்பூர்.70109 92003