தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கருப்ஸ் நகர் 2-வது மற்றும் 3-வது தெருவில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கு குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயந்தி லோகநாதன்,.தஞ்சாவூர்.