புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இறைச்சி கடை, மளிகை கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறைச்சி வியாபாரிகள் இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை தினமும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் மாணவர் விடுதி உள்ளதால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.