கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளியிடங்களில் இருந்து குப்பை கழிவுகளை வேன், டெம்போ மூலம் கொண்டு வந்து இங்கு கொட்டிச் செல்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் இந்த குப்பை கழிவுகளில் மழைநீர் தேங்கி கடும் தூர்நாற்றம் வீசுவதால் இவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.