கம்பம் காந்திநகர் பகுதியில் விநாயகர் கோவில் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்ற வரும் துப்புரவு பணியாளர்களும் குப்பைகளை அகற்றாமல் சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைவாக அகற்ற வேண்டும்.