சாலையோரம் குப்பைகள்

Update: 2025-08-10 17:52 GMT

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு எதிரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. மழை பெய்தால் இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒரு சிலர் அந்த குப்பைகளை தீ வைத்து விடுகின்றனர். இது பஸ் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் தீ எரியும்போது ஏற்படும் புகையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரிகரன், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்