மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்க பகுதியில் உள்ள கோமதி அம்மன் நகர் 2-வது தெருவில் குடியிருப்பு பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகம் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?