கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் நத்தவெளி சாலையோரம் தினசரி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.