தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் ஏழாம் தெருவில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் அழுகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாஜி நகர், பொதுமக்கள்.