நடைபாதையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-07-26 14:45 GMT

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே சங்கர மடம் பகுதியில் உள்ள ஒரு நடைபாதை அருகே குப்பை குவிந்து கிடக்கிறது. இரவில் குடியிருப்புவாசிகள் நடைபாதை அருகே குப்பை கொட்டி செல்கின்றனர். குப்பைகளை நாய்கள் இழுத்து சென்று நடைபாதையில் போடுகின்றன.

இதனால் நடைபாதையிலும் குப்பை பரவி கிடக்கிறது. இது பாதசாரிகளை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் மூக்கை பிடித்து கொண்டு தான் அந்த வழியாக பாதசாரிகள் நடந்து செல்கின்றனர். இதனால் நடைபாதை அருகே குப்பை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்