குப்பை புகையால் விபத்து அபாயம்
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சி அலுவலகம் அருகே, பிரதான சாலையில் ஊராட்சியின் பெயர் பலகை வைத்திருக்கும் இடத்தை மறைத்து குப்பைகள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மேலும் இந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அந்த ஊராட்சி பெயர் பலகையையே மறைக்கும் அளவிற்கு கரும்புகை புகைந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கணியாம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஹீம்அங்குராஜ், கணியாம்பூண்டி
82207 77888