கடலூர் இம்பீரியல் சாலையில் மோகினி பாலம் அருகில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது .இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே குப்பைகளை கொளுத்துவதை நிறுத்தி பாதுகாப்பான இடத்தில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.